• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தேசிய அளவில் 12-வது இடம், தமிழக அளவில் 4-வது இடம் கோவை மாவட்ட நியமன அலுவலருக்கு பாராட்டு

June 22, 2022 தண்டோரா குழு

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் சார்பில் தேசிய அளவில் “ஈட் ரைட் சேலஞ்ச் ” எனும் போட்டியில் தேசிய அளவில் 12-வது இடமும், தமிழக அளவில் 4-வது இடத்தையும் கோவை மாவட்டம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் கோவை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வனை பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளார். இச்சான்றிதழை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் காண்பித்து தமிழ்செல்வன் வாழ்த்து பெற்றார்.

பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் நடைபெற்ற இந்த போட்டியில் உணவு வணிக நிறுவனங்களின் உரிமம் பெறுதல், தொடர் கண்காணிப்பு, உணவு மாதிரிகள் சேகரித்து ஆய்வு செய்தல், விதிமுறைகள் பின்பற்றுதல், உணவு வணிகர்களுக்கான பயிற்சி வழங்குதல் என பல்வேறு குறியீடுகளின் அடிப்படையில் சிறந்து விளங்கும் நகரங்களுக்கு தேசிய அளவில் பரிசுகள் அறிவிக்கப்பட்டது.

தேசிய அளவில் 150 நகரங்கள், மாவட்டங்கள் பங்கேற்று அதில் 75 நகரங்கள், மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் கோவை மாவட்டம் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் 12-வது இடமும், தமிழக அளவில் 4-வது இடமும் பெற்று சிறப்பு சேர்த்துள்ளது.இதன் தொடர்ச்சியாக கடந்த 14ம் தேதி அன்று சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் கோவை மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வனை நேரில் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆட்சியர் சமீரனிடம் கோவை மாவட்ட நியமன அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அப்பாராட்டு சான்றிதழினை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

மேலும் படிக்க