• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட ஆட்சியரின் பெயரில் போலியான வாட்ஸ்அப் கணக்கு

June 22, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியரின் பெயரில் போலியான வாட்ஸ்அப் கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட முயன்ற அடையாளம் தெரியாத நபர்கள்.

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஐஏஎஸ் பெயரில் போலியான வாட்ஸ் அப் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. போலி கணக்கு தொடங்கிய நபர்கள் அமேசான் கிஃப்ட் pay coupon மூலம் பணம் அனுப்ப குறுஞ்செய்தி அனுப்பியதாக தெரிகிறது.

இந்த போலி கணக்கு குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு தெரியவர தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். தனது பெயரில் தொடங்கப்பட்டுள்ள போலி வாட்ஸ்அப் கணக்கின் screenshot உடன் பதிவிட்டுள்ள அவர், தனது பெயர் மற்றும் புகைப்படம் கொண்ட வாட்ஸ்அப் எண்ணில் இருந்து மெசேஜ் வந்தால் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியரின் பெயரில் போலி கணக்கு தொடங்கி அவர்கள் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க