• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி சார்பில் மரம் நடும் விழா

June 22, 2022 தண்டோரா குழு

ஜி ஆர் ஜி அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வருகின்ற கோவை PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி பேராசிரியர்களையும் மாணவர்களையும் சமுதாய தொழில்நுட்பம் மற்றும் இயற்கை மேம்பாடு குறித்து விழிப்புணர்வு அடைய ஏராளமான திட்டங்களை ஊக்குவிப்பதோடு நிதி உதவியும் அளித்து வருகின்றது.

இந்நிலையில் ஜூன் 19ஆம் தேதி அன்று நிலை தன்மையான சுற்றுச்சூழலை நோக்கி : நகர்ப்புற காடு வளர்ப்பின் மூலம் வெளிப்புற இயற்கை வகுப்பறை உருவாக்குதல்( Towards Eco Sustainability : Creating Outdoor Nature Classroom through Urban Forestation“)என்ற திட்டத்தின் கீழ் சேரன்மாநகர் அப்பாச்சி கார்டன் இருப்பு இடத்தில்(reserve site) மரம் நடுவிழா நடைபெற்றது.

இதில் கல்விசார் பாதுகாப்பு மற்றும் முன்னாள் மாணவர்கள் புல முதன்மையர் முனைவர் R.பத்மாவதி ,ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியை R.கனகலதா அவர்கள், மகளிர் மேம்பாடு மற்றும் தொழில்நுட்பவியல் பூங்கா ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ.அகிலா , முனைவர். T.தமிழ்ச்செல்வி, முனைவர். K. சுகுணா , முன்னாள் மாணவர்கள் அமைப்பு ,அரிமா சங்கம் கோயம்புத்தூர் டைடல் சிட்டி , கவுன்சிலர் சரஸ்வதி, ஜி-18 மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நகர்புற காடு வளர்ப்பு மூலம், மக்களிடையே இயற்கை விழிப்புணர்வையும் , குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே இயற்கை சூழலில் நாம் புத்தக வாசிக்கும் போது ஏற்படும் மன மற்றும் உடல் நல மேம்பாடு பற்றிய விழிப்புணர்வையும் கொண்டு செல்வதே இத்திட்டத்தின் நோக்கமாகும். குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை விழிப்புணர்வினை கொண்டு சென்ற இந்நிகழ்வினை கல்லூரி நிர்வாக தலைவர் டாக்டர்.ஆர் .நந்தினி ,கல்லூரி செயலாளர் முனைவர் நா.யசோதாதேவி ,கல்லூரி முதல்வர் முனைவர் ச. நிர்மலா அவர்களும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் படிக்க