• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இலவச அம்மா ஐ.ஏ.எஸ் அகாடமியில் பயிற்சி பெற்று சிவில் சர்வீஸ் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா

June 19, 2022 தண்டோரா குழு

கோவை அவிநாசி சலையில் உள்ள சேம்பர் ஹாலில் நல்லறம் அறக்கட்டளை நடத்தி வரும் இலவச அம்மா ஐ.ஏ.எஸ் அகாடமியில் பயிற்சி பெற்று நடந்து முடிந்த சிவில் சர்வீஸ் தேர்வில் தேசிய அளவில் 46வது இடம் பிடித்து சாதனை படைத்த மாணவி ரம்யா மற்றும் 297 வது இடம்பிடித்த மாணவர் கமலேஸ்வரராவ் ஆகியோருக்கு அம்மா ஐஏஎஸ் அகாடமியின் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.

விழாவில் நல்லறம் அறக்கட்டளையின் தலைவரும், சமூக ஆர்வலருமான எஸ்.பி அன்பரசன், எஸ்.பி.விவேக் அன்பரசன் ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாக பார்க் கல்வி குழுமங்களின் தலைவர் அனுஷா, மற்றும் நந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தினார்கள்.

மேலும், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருணகுமார், மாநகர் செயலாளர் அம்மன் அர்ஜுனன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் எ.கே.செல்வராஜ், தாமோதரன், வி.பி.கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை அம்மா ஐஏஎஸ் அகாடமியின் தலைமை செயல் அதிகாரி கிருத்திகா செய்திருந்தார்.

மேலும் படிக்க