• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு குறித்த ஆய்வு

June 18, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு குறித்த ஆய்வுகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட, நிலையில் பள்ளிகளுக்கு மாணவ-மாணவிகளை அழைத்துச் செல்லக்கூடிய பஸ்,வேன் உள்ளிட்ட பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணிகள் கோவையில் துவங்கியது.

கோவையில் உள்ள வடக்கு, மேற்கு, தெற்கு மற்றும் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் வைத்து,சுமார்,1,200-க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களில் இருக்கைகள், அந்த வாகனங்களில் கதவு, புட்போர்டு, ஜன்னல், டிரைவர் கேபின், அவசர வழி, முதலுதவி பெட்டி,தொடர்பு எண், பள்ளி வாகனங்களின் நிறம், குறிப்பிட்ட இடத்தில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு உள்ளதா? மாணவர்கள் ஏறும் வழி, இறங்கும் வழிகளில் உறுதியான கதவுகள், படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதா உள்ளிட்ட வசதிகள் ஆய்வு செய்யப்பட்டன.

மேலும் வாகன டிரைவர்களின் லைசென்ஸ், வயது விவரம், பார்வைத்திறன் உள்ளிட்டவை சரியாக உள்ளதா எனவும் பரிசோதனை செய்யப்பட்டன. தொடர்ந்து தனியார் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஓட்டுநர் நடத்துநர்களுக்கு சாலைப் போக்குவரத்து பாதுகாப்பு குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது. முன்னதாக இந்த ஆய்வை மாவட்ட ஆட்சியர் சமீரன்,போக்குவரத்து துணை ஆணையர் மதிவாணன், வட்டார போக்குவரத்து இணை ஆணையர் பொன்.செந்தில் நாதன், ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதில்,போக்குவரத்து வட்டார அலுவலர்கள் சத்தியகுமார், பாலமுருகன், சிவகுருநாதன் ஆகியோர் தலைமையில்,கல்வி அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. கோவையில் 230 பள்ளிகளை சேர்ந்த 1265 பேருந்துகள் இந்த ஆய்வில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க