• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மட்டமானது அண்ணாமலை அரசியல் அமைச்சர் செந்தில்பாலாஜி காட்டம்

June 18, 2022 தண்டோரா குழு

கோவையில் சாலை பணிகள், மேல்நிலை தொட்டி கட்டுதல், நகர் நல மையம் உள்ளிட்ட திட்ட பணிகளை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

அவர் பெரிய தடாகம் பகுதியில் கோவை-ஆனைகட்டி சாலையில் ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்பில் சிறு பாலம் கட்டும் பணி, கோவை மேற்கு வார்டு 31ல் நேரு வீதி பகுதியில் ரூ.3 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் 28 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி கட்டுதல் பணி, ரூ.14 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் வாலாங்குளம் புறவழிச் சாலை அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணி, டவுன் ஹால் பகுதியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் 19.8 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலைத் தொட்டி கட்டுதல் உள்ளிட்ட ரூ.38.6 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகளை அமைச்சர் துவக்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து கோவை மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் முதல்வரின் சீரிய முயற்சியால் 143 டாலருக்கு நிலக்கரி கொள்முதல் செய்யப்படுகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு குறைந்த விலைக்கு நிலக்கரி கொள்முதல் செய்யப்படவில்லை. பாஜக ஆளும் மாநிலங்களில் எவ்வளவு டாலருக்கு நிலக்கரி கொள்முதல் செய்யப்படுகிறது என அண்ணாமலையிடம் கேட்டு சொல்லுங்கள்.

வேலை வெட்டி இல்லாதவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழகத்தில் மட்டமான அரசியல் செய்கிறார். ஒருபோதும் பாஜக.,வினரின் கனவு பலிக்காது. நாட்டின் பிரதமரை தீர்மானிக்கும் இடத்தில் நமது முதல்வர் ஸ்டாலின் இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றி செல்வன், திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா ஆர்.கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க