• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக அரசின் வலிமை சிமெண்ட் ஒரே மாதத்தில் 61 ஆயிரம் மெட்ரிக் டன் சிமெண்ட் விற்பனை

June 13, 2022 தண்டோரா குழு

தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் மூலம் உயர்தர வலிமை சிமெண்ட் அன்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த புதிய ரக வலிமை சிமெண்ட் அதிக உறுதியும், விரைவான உலரும் தன்மையும், அதிக வெப்பத்தை தாங்கும் தன்மையும் கொண்டது. தமிழக அரசின் வலிமை சிமெண்ட் உறுதித்தன்மை வாய்ந்தது. இந்த சிமெண்ட் தரத்தின் அடிப்படையில் சிமெண்ட் மூட்டை ரூ.335 மற்றும் ரூ.350 என இரு விலைகளில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக ரூ.35 வரை போக்குவரத்து செலவுக்கு வசூலிக்கப்படுகிறது.

தற்போதைய மூலப்பொருட்களின் விலையின் அடிப்படையில் சிமெண்ட்டின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகம் என்ற பெயரில் சிமெண்ட் விற்பனை செய்து வருகிறது.

தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் வலிமை சிமெண்ட் விற்பனை தொடர்பாக முகவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக முகவர்கள் எண்ணிக்கை தமிழகம் முழுவதும் அதிகரித்து வலிமை சிமெண்ட் விற்பனை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு சிமெண்டஸ் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘தமிழகம் முழுவதும் வலிமை சிமெண்ட் விற்பனை அதிகரித்துள்ளது. பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் வலிமை சிமெண்ட் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முகவர்களுடன் நடத்தப்பட்ட விழிப்புணர்வு கூட்டம் நல்ல பயனை தந்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் தமிழகம் முழுவதும் 61 ஆயிரம் மெட்ரிக் டன் வலிமை சிமெண்ட் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வலிமை சிமெண்ட் அறிமுகம் செய்த நாளில் இருந்து தற்போது வரை 1 லட்சத்து 80 ஆயிரம் மெட்ரிக் டன் சிமெண்ட் விற்பனை செய்யப்பட்டுள்ளது,’’ என்றார்.

மேலும் படிக்க