இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ள பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் முதன் முறையாக தனியார் பங்களிப்புடன் கோயம்புத்தூரில் இருந்து ஷீரடிக்கு ஆன்மீக சுற்றுலாப் பயண மேற்கொள்ள ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது.இரண்டு அடுக்கு ஏசி மற்றும் உயர்தர வசதிகளைக் கொண்ட இந்த வாராந்திர ரயில் பயணம், செவ்வாய்க்கிழமை காலை தொடங்கி வெள்ளிக்கிழமை மாலை முடிவடையும்.
கோயம்புத்தூரில் இருந்து ஈரோடு,சேலம், பெங்களூர், மந்த்ராலாயம் வழியாக ஷீரடிக்கு செல்லும் இந்த பயணத்தில்,ஒரே கட்டணத்தில், 4 நாட்களுக்கான உணவு மற்றும் ரயில் பயணத்திற்கு தேவையான படுக்கை விரிப்புகள், தலையணை,போர்வை,கிருமி நாசினி உள்ளிட்ட தினசரி பயன்பாட்டு பொருட்கள், ஷீரடியில் போக்குவரத்து வசதி,வியாழக்கிழமை சாய் தரிசனம்,தரிசனத் திற்கான கட்டணம் என அனைத்தும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் 14ம் தேதி கோவையில் இருந்து ஷீரடிக்கு முதல் முறையாக தனியார்(MNC) பங்களிப்புடன் ரயில் பயணம் துவங்க உள்ளது. இதற்காக பூஜை இன்று நடைபெற்றது.இதில் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்