• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

75 பேருக்கு ரூ.12.60 கோடி கடன்கள் பெற ஆணை – ஆட்சியர் வழங்கல்

June 9, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 75 வாடிக்கையாளர்களுக்கு ரூ.12.60 கோடி கடன்கள் பெறுவதற்கான ஆணையினை ஆட்சியர் சமீரன் வழங்கினார்.

மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் பல்வேறு வங்கி பயனாளிகளுக்கு கல்வி கடன், வீட்டுவசதி, முத்ரா கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே 75 வாடிக்கையாளர்களுக்கு ரூ.12.60 கோடி மதிப்பில் கடன் பெறுவதற்கான ஆணைகளையும்,வங்கிகளில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்கள், பணியாளர்கள், சிறப்பாக செயல்பட்ட வங்கி கிளைகள் மற்றும் சிறந்த வங்கி முகவர் என மொத்தம் 75 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை ஆட்சியர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கினார்கள்.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகளின் மூலம் இந்த மாதத்தில் கல்வி கடன், விவசாய கடன், வீட்டு கடன், சுயஉதவி குழு கடன், சிறு குறு தொழில் தொடங்க கடன், தனி நபர் கடன், வாகன கடன் என 13 ஆயிரத்து 562 கடன் கணக்குகள் தொடங்கப்பட்டு ரூ.355 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.நடராஜன் (கோவை), சண்முகசுந்தரம் (பொள்ளாச்சி), கனரா வங்கி மண்டலத் தலைவர் ஸ்ரீனிவாசராவ், இந்தியன் வங்கி மண்டலத் தலைவர் சீனிவாசன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டலத் தலைவர் விஜயா, பஞ்சாப் நேஷனல் வங்கியின் மண்டல மேலாளர் ஸ்ரீனிவாஸ், பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் இன்பரசன், சி.டி.சி.சி. மேலாண் இயக்குநர் இந்துமதி, பாங்க் ஆப் இந்தியா உதவி பொது மேலாளர் ராஜி முனுசாமி, நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் திருமலராவ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க