• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ம. நீ.ம சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை கவுரவிக்கும் விதமாக விருது

May 30, 2022 தண்டோரா குழு

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்களை கவுரவிக்கும் விதமாக விருது வழங்கும் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது.

மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பில் கோவை மாநகராட்சி தேர்தலில் அக்கட்சியினர் பல்வேறு வார்டுகளில் போட்டியிட்டனர் இவர்களை கௌரவிக்கும் விதமாக விருது வழங்கக்கூடிய நிகழ்ச்சி கோவை சுந்தராபுரத்திலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் எதிர்கால திட்டங்கள் மற்றும் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது குறித்து நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட அக்காட்சி வேட்பாளர்களுக்கு விருது வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில துணைத்தலைவர் தங்கவேலு, மாநிலச் செயலாளர் ரங்கநாதன், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மண்டல ஊடகப்பிரிவு செயலாளர் ரம்யா வேணுகோபால்,மாநில செயலாளர் அனுஷா ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க