• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

May 24, 2022 தண்டோரா குழு

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த காதல் ஜோடி கழுத்தில் மாலையுடன் மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா செட்டிபள்ளி பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார் (21). மர வேலைப்பாடுகள் செய்யும் பிரவீன்குமாரும் ஓசூரை அடுத்த சாமனப்பள்ளி பகுதியை சேர்ந்த நதியா(19)-வும் சிறுவயது முதலே நண்பர்கள்.இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக 12ஆம் வகுப்பை நிறைவு செய்த நதியாவை மேல்படிப்பிற்கு அனுப்பாத பெற்றோர்கள் வீட்டிலேயே அடைத்து வைத்திருந்தாக கூறப்படுகிறது.இந்நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி இன்று கோவை வந்தடைந்தனர். இருவரும் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் முன்னிலையில் சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் திருமணம் செய்த மாலையுடன் கோவை பந்தயச்சாலையில் உள்ள மேற்கு மண்டல காவல்துறைத் தலைவர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், இருவரும் மாற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் தங்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், தற்போது இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவருக்கும் தங்களது பெற்றோர்களிடமிருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என மனு அளித்தனர்.

மேலும் படிக்க