• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் தொழில் கூடம் மூடல் – நடவடிக்கை எடுக்க கோரி டாக்ட் சங்கம் கோரிக்கை

May 24, 2022 தண்டோரா குழு

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கம் (டாக்ட்) சார்பாக மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கராவிடம் மாவட்ட தலைவர் ஜேம்ஸ் மனு ஒன்று அளித்துள்ளார்.

இதுகுறித்து டாக்ட் மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது:

கோவை கவுண்டம்பாளையம் அருகே இடையர்பாளையம் ரோட்டில் உள்ள சவுடாம்பிகா நகரில் கடந்த 17 ஆண்டுகளாக தனியார் இன்ஜினியரிங் மற்றும் கடந்த 7 ஆண்டுகளாக தனியார் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவைகுறுந்தொழில் முனைவோர்களால் சி.என்.சி இயந்திரமும், லேத்தும் வைத்து தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த தொழில் கூடங்களால் பிரச்சனைகள் ஏற்படுவதாக அப்பகுதியில் உள்ள சிலர் புகார் கொடுத்ததின் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வந்தார்கள். ஆனால் எந்த வித விசாரணையும் மேற்கொள்ளாமல் இரண்டு தொழில் கூடங்களையும் காலி செய்ய சொல்லியும், எவ்விதமான முன் அறிவிப்பும் இல்லாமல் வேலை செய்து கொண்டு இருந்த தொழிலாளிகளை வெளியே அனுப்பினார்கள்.

கடுமையாக தொழில்கள் பாதித்து முடங்கி உள்ள இந்த சூழ்நிலையில் அதிகாரிகள் எவ்விதமான முன் அறிவிப்பும் இல்லாமல் குறுந்தொழில் கூடங்களை மூடி சாவி எடுத்து சென்றது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இரண்டு தொழில் முனைவோர்களும் வங்கியில் கடன் பெற்று வீட்டுடன் தொழில் கூடமும் வைத்து நடத்தி வருகின்றார்கள். தொழில் கூடம் மூடியது அந்த குடும்பத்தை மட்டும் அல்லாமல் அவர்களிடம் பணி புரியும் தொழிலாளிகளின் வாழ்க்கையும் பாதிக்க செய்து உள்ளது.

குறுந்தொழில் முனைவோர்கள் குடும்பம், தொழிலாளர்கள் நடுத்தெருவில் நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆட்சியர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுத்து குறுந்தொழில்களை காக்க வேண்டும்.

இவ்வாறு ஜேம்ஸ் கூறினார்.

மேலும் படிக்க