• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் கலக்கிய விஜய் டிவி புகழ் பாலா

May 24, 2022 தண்டோரா குழு

கோவை நேரு நகர் பகுதியில் உள்ள சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் திடீரென மேடையில் தோன்றி கலக்கிய விஜய் டிவி புகழ் பாலா…கல்லூரி மாணவ,மாணவிகள் ஆரவாரம்.

கோவை காளப்பட்டி சாலை நேரு நகர் பகுதியில் உள்ள சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் 2019-2022 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான பிரிவு உபசார விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது.கல்லூரியின் மேலாண் இயக்குனர் லஷ்மிநாராயணசாமி,மற்றும் சுகுணா கல்வி குழுமங்களின் தலைவர் சுகுணா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில், கல்லூரியின் முதல்வர் கோவிந்தராஜுலு , டீன் ரம்யா சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக, மேட்டுப்பாளையம் காவல் துறை சரக டி.எஸ்.பி.பாலமுருகன் கலந்து கொண்டு, கல்லூரி படிப்பை முடித்து செல்லும் மாணவர்கள் வாழ்வில் சந்திக்க உள்ள சவால்கள் ,அவற்றை தாண்டி சாதிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். மேலும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படும் துறைகளில் முழு அர்ப்பணிப்புடன் செல்படுவதால், பெரிய சாதனைகளை சாதிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

முன்னதாக விழாவில் கலந்து கொண்ட முக்கிய விருந்தினர்கள் மாநில , மாவட்ட , மற்றும் கல்லூரி அளவில் நடைபெற்ற விளையாட்டு , அறிவு திறன் கலை நிகழ்ச்சி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ , மாணவிகளுக்கு சான்றிதழ்களும், அண்மையில் மாநில அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் இரண்டாமிடம் பிடித்த சுகுணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு கோப்பைகள் வழங்கியும் கவுரவித்தனர்.

தொடர்ந்து விழாவின் ஒரு பகுதியாக,சிறப்பு அழைப்பாளராக மேடையில் தோன்றிய விஜய் டிவி புகழ் பாலா மற்றும் விக்கி சிவா ஆகியோர் மிமிக்ரி மற்றும் காமெடியுடன் மாணவ, மாணவிகளிடம் பேசினர். விழாவில் மாணவ , மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் கல்லூரி பேராசிரியர்கள் , பெற்றோர் ,மாணவ,மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க