• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு சார்பாக கோவையில் 10 எம்.ஏல்.ஏக்கள் அதிரடி ஆய்வு

May 24, 2022 தண்டோரா குழு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை,சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை உள்ளிட்ட துறைகளின் பணிகளை கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் களஆய்வு மேற்கொண்டனர்.

அதன் படி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது உழவர் சந்தையில் அடிப்படை வசதிகள்,அரசு சார்பாக மேற்கொண்ட பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.அப்போது மக்கள் அவர்களிடம் காய்கறிகள் குறைந்த விலையில் கிடைக்கிறது என்றனர்.

பின்னர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மண்புழு மூலம் உரம் தயாரிக்கும் பணிகளை பார்வையிட்டனர். அதை தொடர்ந்து ஜி.சி.டி. தடாகம் சாலையில் உள்ள விதை பரிசோதனை நிலையத்தை பார்வையிட்டனர்.

இந்த ஆய்வில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு உறுப்பினரும், எம்.ஏல்.ஏக்களுமான டிஆர்பி ராஜா, அன்பழகன்,ஈஸ்வரன்,எழிலரசன்,சிவக்குமார், ராமச்சந்திரன்,ராஜ்குமார்,சதன் திருமலைக்குமார்,அம்மன் கே அர்ஜுனன், பாலசுப்பிரமணியன்,மேயர் கல்பனா ஆனந்தகுமார்,துணைமேயர் வெற்றி செல்வன், ஆட்சியர் சமீரன், மாநகராட்சி துணை கமிஷனர் சர்மிளா,கவுன்சிலர்கள் அழகு ஜெயபாலன், கார்த்திக்,மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ்,முன்னாள் எம்எல்ஏ கார்த்திக், மேற்கு மண்டல தலைவர் தெய்வ யானை தமிழ்மறை, காங்கிரஸ் நிர்வாகி சோமு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க