• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு- கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

May 19, 2022 தண்டோரா குழு

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து வாயில் வெள்ளை துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். பொதுமக்கள் மற்றும் பல்வேறு இயக்கங்கள் பேரறிவாளனின் விடுதலையை இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.ஆனால் காங்கிரஸ் சார்பில் பேரறிவாளன் விடுதலைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில் இன்று கோவை காங்கிரஸ் கமிட்டி சார்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாயில் வெள்ளை துணி கட்டி சாலையில் அமர்ந்து காங்கிரஸார் அமைதிப் போராட்டம் நடத்தினர்.

மேலும் இதில் வன்முறையை எதிர்ப்போம் கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது என்ற தலைப்பில் பேனர்கள் வைத்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் வாயில் வெள்ளை துணி கட்டி அமைதிப் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க