கல்லூரி மாணவர்களின் தனி திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோவை குமரகுரு நிறுவனங்களின் யுகம் சார்பில் தென்னிந்திய மெகா டெக்னோ கலாச்சார விளையாட்டு விழா நடைபெறுகிறது.
தொழில் நுட்பம்,கலாச்சாரம் மற்றும் விளையாட்டு விழாக்களை மேம்படுத்தும் விதமாக கடந்த 2013ஆம் ஆண்டு முதல் குமரகுறு கல்வி நிறுவனங்களின் யுகம் என்பது செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் குமரகுரு நிறுவனங்களின் மாணவர்கள் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது.
இந்த ஆண்டு 150க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொள்ள இருக்கும் மெகா டெக்னோ கலாச்சார விளையாட்டு விழா கோவை சரவனம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரியில் நடைபெறுகிறது.
நாளை 19ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் நடைபெற இருக்கும் இதில் கல்லூரி மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக தொழில் நுட்பம், கலாச்சாரம், விளையாட்டு உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளும் தொழில் சார்ந்த 60க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளது.
மேலும் இதில் பங்கேற்று வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு சிறந்த பரிசுகள் மற்றும் பாராட்டுகள் வழங்கப்பட உள்ளது.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்