• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில் வர்த்தகம் திறனை மேம்படுத்த இரண்டு நாள் விற்பனை விழா

May 17, 2022 தண்டோரா குழு

கோவை ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி,மேலாண்மை துறை சார்பாக, மாணவ,மாணவிகளின் தொழில், மற்றும் வர்த்தகம் குறித்த திறனை மேம்படுத்தும் விதமாக இரண்டு நாள் விற்பனை விழா துவங்கியது.

கோவை வட்டமலைபாளையம் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில்,மேலாண்மை துறை சார்பாக இரண்டு நாட்கள் நடைபெற உள்ள விற்பனை கண்காட்சி துவக்க விழா நடைபெற்றது.கல்லூரியில் பயிலும் போதே மாணவ, மாணவிகளுக்கு வர்த்தகம் மற்றும் தொழில் மேம்பாட்டு திறனை வளர்க்கும் விதமாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில்,விற்பனை கண்காட்சியை கல்லூரியின் துணை முதல்வர் கருப்புசாமி துவக்கி வைத்தார்.

இதில் முழுக்க மாணவ,மாணவிகளால் உருவாக்கப்பட்ட சுமார் 25 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம் பெற்றன. இதில்,மேற்கத்திய மற்றும் தென்னிந்திய உணவு வகைகள், இளம் பெண்களைக் கவரும் ஆபரணங்கள் , உடைகள் ,கைப்பைகள் என பல்வேறு துறை சார்ந்த ஸ்டால்கள் இடம் பெற்றன.

விற்பனை விழா குறித்து மேலாண்மை துறை தலைவர் டாக்டர் மேரி மெட்டல்டா கூறுகையில்,

மேலாண்மை தொடர்பான கல்வி பயிலும் போதே வர்த்தகம் தொடர்பான திறமைகளை வளர்த்து கொள்ள இது போன்று கடந்த பத்து ஆண்டுகளாக நடத்தி வருவதாகவும்,இதனால் கொள்முதல்,விற்பனை,லாபம் போன்ற தொழில் தொடர்பான திறன்களை மாணவ,மாணவிகள் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க