• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவைக்கு வரும்19ம் தேதி ஸ்டாலின் வருகையையொட்டி ஏற்பாடுகள் தீவிரம்

May 16, 2022 தண்டோரா குழு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 19ஆம் தேதி கோயம்புத்தூர் வ.உ.சி மைதானத்தில், “பொருநை”அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் ஓராண்டு சாதனைகள் ஓவியக்கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட உள்ளார்.

இதுதொடர்பான நிகழ்ச்சி முன்னேற்பாடுகள் வ.உ.சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வ.உ.சி மைதானத்தில் அமைக்கப்பட்டுவரும் “பொருநை” அகழ்வாராய்ச்சி கண்காட்சி முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் சமீரன்,மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் ஆகியோர் முதல்வர் வரும் மைதானத்தை பார்வையிட்டனர்.இதை தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர் சந்திப்பில் பேசும்பொழுது,19 ம் தேதி காலை முதல்வர் ஒன்பது முப்பது மணிக்கு வஉசி மைதானத்தில் ஓராண்டு சாதனை புகைப்பட கண்காட்சி மற்றும் பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைக்கிறார். பிறகு 10 மணி அளவில் ரெசிடென்சி ஓட்டலில் தொழில் முனைவோர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இரண்டு நிகழ்ச்சிகள் கோவை மாவட்டத்தில் நடைபெறுகிறது.முதல்வர் வருகையையொட்டி 10 இடங்களில் பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.நாளை மாலைக்குள் இந்த பணிகள் முடிவடையும்.அதற்கான சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது.இந்த கண்காட்சி பத்து நாட்கள் நடைபெறுகிறது .பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் இந்த புகைப்பட கண்காட்சியை கண்டு களிக்கலாம் என தெரிவித்தார்.

மேலும் படிக்க