• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை-டெல்லி பார்சல் ரயில் சேவை துவக்கம்….!

May 15, 2022 தண்டோரா குழு

முதன் முறையாக கோவையிலிருந்து டெல்லி பட்டேல் நகர் வரையிலான வாராந்திர கார்கோ எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவங்கப்பட்டது.

தென்னிந்தியாவின் மான்சிஸ்டர் என அழைக்கப்படும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள மாவட்டமாக கோவை உள்ளது.குறிப்பாக தொழிற்சாலைகளுக்கு தேவையான பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து அதிகம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படுகிறது.

அதே போல விவசாய விளைபொருட்கள், உணவு பொருட்கள் என அனைத்தும் ஏற்றுமதி செய்ய ஏதுவாக கோவை தெற்கு ரயில்வே கோவை முதல் தலை நகர் டெல்லி பட்டேல் நகர் வரை முதன் முறையாக வாராந்திர பார்சல் கார்கோ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் இன்று கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

கோவை,திருப்பூர்,ஈரோடு சேலம்,ரேனி குண்டா ஆகிய வழிதடங்களில் பர்செல் ரயில் சேவை இயக்கப்படுகிறது.அதேபோல அடுத்த மாதத்திலிருந்து வாரம் இரண்டு முறை பார்சல் ரயில் இயக்கப்படும் என பார்சல் ஏஜென்ஸிஸ் அனில் பரேஜா மற்றும் ரயில்வே துறையினர் அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்க