• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெள்ளலூர் கிடங்கில் பயோ மைனிங் மூலம் 16 ஏக்கர் குப்பைகள் அழிப்பு

May 14, 2022 தண்டோரா குழு

கோவை வெள்ளலூர் பேரூராட்சிக்குட்பட்ட செட்டிபாளையம் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 650 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக்கிடங்கு உள்ளது.கோவை மாநகரில் உள்ள 100 வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த கிடங்கில் கொட்டப்படுகிறது.

அளவுக்கு அதிகமான குப்பைகள் சேகரமாகும் நிலையில் குப்பைகளுக்கு இடையே மீதேன் எரிவாயு உருவாகி அவ்வப்போது தீ விபத்து ஏற்படுகிறது.குப்பைகள் ஒரே பகுதியில் சேகரிக்கப்படுவதால்,தீ மளமளவென பரவி, கரும் புகை மூட்டம் ஏற்படுகிறது.இதனால், சுற்றுவட்டாரப்பகுதிகளில் வசிக்கும் சுமார் 50 ஆயிரம் மக்கள் மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு கடும் அவதியடைந்து வருகின்றனர்.

குப்பையை அகற்ற ரூ.60 கோடி செலவில் பயோ-மைனிங் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தினமும் 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 கனமீட்டர் குப்பை தரம் பிரித்து அழிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்

,‘‘கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கடந்த 10 ஆண்டுகளாக சுமார் 66 ஏக்கரில் பல லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்படாமல் இருந்தது. இதனை பயோமைனிங் முறையில் அழித்திட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததன் பயனாக 16 ஏக்கர் அளவில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் அழிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள குப்பைகளை அழிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது’’ என்றார்.

மேலும் படிக்க