May 13, 2022 
தண்டோரா குழு
                                கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 37வது பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தலைமை வகித்து பட்டங்களை வழங்கவுள்ளார்.
இந்த விழாவில்  பி.எச்டி., பட்டம் பெற்ற 1687 மாணவர்கள்,முதுநிலை,இளநிலை பட்டங்களில் பல்கலை அளவில் முதலிடம் பெற்ற 267 மாணவர்களும், பட்டங்களையும், தங்க பதக்கத்தையும் நேரடியாக பெறவுள்ளனர்.1,504 பேர் எம்.பில்.,1,50,424 பேர் இளநிலை பட்டமும், 48,034 பேர் முதுநிலை பட்டம் என 2,04,362 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி,தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.