• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

முழுக்க இந்திய தயாரிப்பில் உருவாகி உள்ள இணையதள சேவை உபகரணம் ஓ.எல்.டி.(OLT) அறிமுகம்

May 11, 2022 தண்டோரா குழு

முழுக்க முழுக்க இந்திய தயாரிப்பில் உருவாகி உள்ள இணையதள சேவை உபகரணம் ஓ.எல்.டி.(OLT) அறிமுக விழா கோவையில் நடைபெற்றது.

வீடுகள்,தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் இணையதள சேவை வழங்குவதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.இந்த சேவையை வழங்குவதற்கு முக்கிய உபகரணமாக ஓ.எல்.டி.(OLT) பயன்படுத்தபட்டு வருகின்றது.இது வரையில் சீன நாட்டின் தயாரிப்பில் ஓ.எல்.டி.பயன்படுத்தபட்டு வந்த,நிலையில் தற்போது தொலை தொடர்பு நிறுவனத்திற்கு தேவையான உபகரணங்களை தயாரித்து கொடுக்கும் டாடா நிறுவனத்தின் பெங்களூரை சேர்ந்த தேஜாஸ் நெட் வொர்க் முழுக்க இந்திய தயாரிப்பாக ஓ.எல்.டி.யை தயாரித்து இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்நிறுவனத்தின் தயாரிப்பு உபகரணமான ஓ.எல்.டி.அறிமுக விழா கோவையில் நடைபெற்றது.ஸ்ரீ வாரி நிறுவனத்துடன் இணைந்து நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ,ஸ்ரீ வாரி நிறுவனத்தின் தொழில் நுட்ப இயக்குனர் ஜீவானந்தம் மற்றும் இயக்குனர் சுகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.சிறப்பு விருந்தினராக தேஜாஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணை தலைவர் மோகன் ஷியாம் தூபே கலந்து கொண்டு ஓ.எல்.டி.விற்பனை சேவையை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் இணையதள சேவை வழங்கும்க பல்வேறு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். இதுவரை,இணையதள சேவையில் சீன நாட்டின் உபகரணத்தை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது அதிக உத்தராவதாத்துடன் முழுக்க இந்திய தயாரிப்பாக வந்துள்ள புதிய ஓ.எல்.டி.இணையதள சேவை துறையினரிடையே பெரும் வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க