• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மரம் விழுந்து ஒருவரின் கால் துண்டிப்பு..! பத்திரப்பதிவு அலுவலகத்தில் பரபரப்பு….!

May 11, 2022 தண்டோரா குழு

கோவையில் பத்திரப்பதிவு அலுவலகத்த்திற்க்கு வந்த நபர்கள் மீது மரம் விழுந்ததால் ஒருவரின் கால் துண்டான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் கடந்த இரண்டு நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது.இதனால் பல்வேறு பகுதியில் மழையின் காரணமாக மரங்கள் சாய்ந்து வருகிறது. இந்நிலையில் கோவை போத்தனூர் ஐ சேர்ந்த பரூக் என்பவர் கிணத்துக்கடவு பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு தன்னுடைய வேலை சம்மந்தமாக வந்துள்ளார்.

அப்போது அங்கிருந்த மரம் ஒன்று முறிந்து அவர் மீது விழுந்துள்ளது.மரம் விழுந்ததில் அவருடைய கால் இரண்டு துண்டாகியுள்ளது. அதேபோல் அருகில் இருந்த பெண் ஒருவர் மீது மரம் விழுந்ததில் அவர் படுகாயம் அடைந்தார்.அங்கிருந்த நபர்கள் இருவரையும் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பத்திர பதிவிற்கு வந்த நபர் மீது மரம் விழுந்து கால் துண்டான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க