• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் தக்காளி காய்ச்சல் எதிரொலி…! – கோவையில் கண்காணிப்பு தீவிரம்

May 10, 2022 தண்டோரா குழு

கேரளாவில் பரவும் தக்காளி காய்ச்சலின் எதிரொலியாக தமிழக-கேரள எல்லையான கோவை வாளையார் சோதனை சாவடியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில் தக்காளி காய்ச்சல் எனப்படும் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை தாக்கும் இந்த காய்ச்சல், சருமத்தில் சிவப்பு திட்டுக்கள் ஏற்படுத்துகிறது. இதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு, உடல்வலி, சோர்வு, கைகால்கள் வெள்ளை நிறமாக மாறுதல், முகத்தில் சிவப்பு நிற புள்ளிகள் தோன்றுதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் தமிழக -கேரளா எல்லைப்பகுதியான வாளையார் பகுதிகளில், காய்ச்சல் அறிகுறிகளுடன் வருவோரிடம் கோவை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.இந்த நோய் எளிதில் சரியாகி விடும் என தெரிவிக்கும் கேரளாவை சேர்ந்த நபர் யாரும் அச்சப்பட தேவையில்லை,”என்றனர்.

தொடர்ந்து கோவையில் உள்ள அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா என்பது குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க