• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரங்களை பதிவேற்றுவதில் சிக்கல்

May 6, 2022 தண்டோரா குழு

கோவை போத்தனூர் ஆரம்ப சுகாதார மையத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சான்று பெற முடியாமல் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை காத்துக்கொள்ள தடுப்பூசி அவசியம் செலுத்த வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்கள் தற்போது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், போத்தனூரில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் தினமும் 20க்கும் மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே குறிச்சியில் இருந்து போத்தனூர் வரை குடிநீர் பைப் மற்றும் கேபிள் பதிப்பதற்காக சாலையில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக ஆரம்ப சுகாதார மையத்தில் இணைய சேவை தடைபட்டுள்ளது. இதனால் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியவர்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்ற முடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி செலுத்தியவர்கள் அதற்கான சான்றுகள் பெற முடியாமல் அவதி அடைந்துள்ளனர்.

இது குறித்து அங்கு தடுப்பூசி செலுத்த வருபவர்கள் கூறுகையில்,

‘‘தடுப்பூசி செலுத்திய பின்னரும் அதற்கான சான்று கிடைப்பதில்லை. இணையத்தில் பதிவேற்ற முடியாததால் சான்று கிடைக்க தாமதமாகலாம் என்று தெரிவிக்கின்றனர். போத்தனூர் சாலையில் கேபிள்கள் பதிக்கும் பணி எப்போது முடியும் என்று தெரியாது. எனவே தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து உடனே மக்களுக்கு கிடைப்பதற்கு அதிகாரிகள் வழிவகை செய்யவேண்டும்’’ என்றனர்.

மேலும் படிக்க