• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோயம்புத்தூர் சாய்சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் தொழில் சாதனையாளர் விருது வழங்கும் விழா

May 2, 2022 தண்டோரா குழு

கோயம்புத்துார் சாய்சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் தொழில் சாதனையாளர் விருது வழங்கும் விழா கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.இவ்விருது கோயம்புத்தூர் டிசைன் ஃபோரம் இந்தியா பிரைவேட் லிமிடெட், நிர்வாக இயக்குனர் இன்ஜினியர் சி.ஜே ரகுநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

ஆண்டுதோறும் தொழிலில் சாதனை புரிந்தோர்களை அங்கீகாரிக்கும் விதமாக சாய்சிட்டி ரோட்டரி கிளப்,இந்த சிறப்பு விருதினை அளித்து கவுரவித்து வருகிறது. இந்த தொழில் சிறப்பு விருது வழங்கப்படுவதின் நோக்கம், தொழிலில் சிறந்து விளங்குவதோடு, குறிப்பிடத்தக்க அளவில் சாதனை படைத்ததை அங்கீகாரித்து கவுரவிக்க வேண்டும் என்பதாகும்.

குத்து விளக்கேற்றத்துடன் துவங்கிய விருது வழங்கும் நிகழ்ச்சியில் ரோட்டரி மாவட்டத்தின் முதல் பெண்மணி சாந்தி ராஜசேகர்,மீரா ரகுநாதன்,மாவட்ட இயக்குனர் குமரேசன், உதவி கவர்னர் கணேஷ்குமார் மற்றும் ஜிஜிஆர் அருள்குமரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அனைவரையும் வரவேற்று, விருதினை கோவை சாய்சிட்டி ரோட்டரி கிளப்பின் தலைவர் கோபிநாத் சி.ஜே ரகுநாதனுக்கு வழங்கினார்.

இந்த சிறந்த தொழில் விருது பற்றி மாவட்ட தலைவர் எம்டி முத்துராமன் விளக்கினார். விருது பெற்ற சி.ஜெ ரகுநாதனை காணொளி காட்சியில், திட்ட தலைவர் வி.மாரப்பன் அறிமுகம் செய்தார். விருது வழங்கும் விளக்கத்தை ரவிசெல்வன் வழங்கினார். விருதினை பெற்றுக் கொண்டு இன்ஜினியர் ரகுநாதன் ஏற்புரையாற்றினார்.

மாவட்ட ஆளுநர் எஸ்,ராஜசேகர் ஆர்.ஐ மாவட்டம் 3201 சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பிரிக்கால் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் விஜய்மோகன் தலைமை விருந்தினராக பங்கேற்றார். இறுதியாக செயலாளர் சைலேஷ்.கே நன்றியுரையற்றினார்.

கோயம்புத்துார் சாய்சிட்டி ரோட்டரி கிளப் கடந்த 30 ஆண்டுகளாக கோவையில் பல்வேறு சமுதாய நல பணிகளையும், குறிப்பிடத்தக்க திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளது. வாழ்க்கை பரிசு என்ற திட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட 15 வயதுக்கு உட்பட்ட ஏழை குழந்தைகளுக்கு இருதயம் மற்றும் மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க