• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் துவங்கியது

April 27, 2022 தண்டோரா குழு

அறம் சேரிட்டபிள் பவுண்டேஷன் சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் ஹச்.சி.எல்.பவுண்டேஷன் மாற்றத்திற்கான விளையாட்டு ஆகியோர் இணைந்து கோவையில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் நூறுக்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா்.

கோவை கல்வி மாவட்ட அளவில் அரசு பள்ளி மாணவ– மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நேரு ஸ்டேடிய மைதானத்தில் நடைபெற்றது. அறம் சேரிட்டபிள் பவுண்டேஷன் சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் ஹச்.சி.எல். பவுண்டேஷன் ஆகியோர் இணைந்து நடத்திய இந்த போட்டிகளை,டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் லதா சுந்தரம் ஒருங்கிணைத்த போட்டிகளை கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் கீதா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதில், கைப்பந்து, கால்பந்து, கையுந்து பந்து, பூப்பந்து, எறிபந்து, வளைகோல் பந்து, கேரம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து மாணவ– மாணவிகள் கலந்துகொண்டு ஆர்வமுடன் விளையாடி தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்த போட்டிகளை தொடர்ந்து 100 மீட்டர், 200 மீ, 400 மீ, 800 மீ, 1,500 மீட்டர் ஓட்டம், தடை தாண்டி ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.இதற்கான ஏற்பாடுகளை ஹச்.சி.எல். பவுண்டேஷன் நிர்வாகிகள் மற்றும் அறம் பவுண்டேஷன் சேரிட்டபிள் டிரஸ்ட் அறங்காவலர்கள் சரவணன்,மாதவன்,கோகுல் ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் படிக்க