• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூலப்பொருள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த மானிட்டர் கமிட்டி அமைக்க கோரிக்கை

April 26, 2022 தண்டோரா குழு

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் (டாக்ட்) சங்கத்தின் கோவை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் ஜேம்ஸ் தலைமையில் நடைபெற்றது.பொதுச்செயலாளர் பிரதாப்சேகர், பொருளாளர் லீலாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாவட்ட துணை தலைவர் சக்திவேல் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது குறித்து மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியிருப்பதாவது:

ஒன்றிய அரசு குறுந்தொழில்களை பாதுகாக்க தனி கடன் திட்டத்தை அறிவிக்க வேண்டும். 2017ல் இருந்து 2020ம் ஆண்டு வரை காலம் தாழ்த்தி ஜிஎஸ்டி கட்டிய தொழில் முனைவோர்களுக்கு அபராத வட்டி போட்டு கட்டச் சொல்லி நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். ஒன்றிய அரசு இந்த அபராத வட்டியை வசூலிப்பதில் இருந்து குறுந்தொழில்களை விடுவித்து பாதுகாக்க வேண்டும்.

ஜாப் ஆர்டர் செய்கின்ற குறுந்தொழில் முனைவோர்களுக்கு ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் கொண்டு வர வேண்டும். தமிழக அரசு சார்பில் கோவையில் குறுந்தொழில் பேட்டைகள் ஏற்படுத்தித் தரவேண்டும். தமிழக அரசு சார்பில் குறைந்த வட்டியில் தாய்கோ வங்கி மூலம் நிபந்தனையற்ற கடனாக ரூ.5 லட்சம் வரை கால அவகாசத்துடன் வழங்க வேண்டும். மூலப்பொருள் விலையேற்றத்தை கட்டுப்படுத்த மானிட்டர் கமிட்டி அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க