கோவை-திருப்பதி விரைவு ரயிலில் 2 கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:
கோவையில் இருந்து செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் கோவை -திருப்பதி விரைவு ரயிலில் ஏப்ரல் 24ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை ஒரு குளிர்சாதன வசதியுடைய பெட்டி மற்றும் ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டி என 2 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு இயக்கப்படும்.
அதேபோல்,திங்கட்கிழமை, புதன்கிழமை, சனிக்கிழமைகளில் இயக்கப்படும் திருப்பதி-கோவை விரைவு ரயிலில் ஏப்ரல் 23ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை ஒரு குளிர்சாதன வசதியுடைய பெட்டி மற்றும் ஒரு இரண்டாம் வகுப்பு பெட்டி என 2 பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்பட்டு இயக்கப்படும்.
இவ்வாறு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்