கோவை அரசு கலை கல்லூரியில் இரத்த தான முகாம் அரசு கல்லூரி கலையரங்கத்தில் அரிமா சங்கம் சார்பில் நடைபெற்றது.
கோவை அரசு கலை அறிவியல் கல்லூரி(AUTONOMOUS) கலையரங்கத்தில் இரத்ததான முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை அரிமா சங்க மாவட்ட ஆளுநர் நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.மேலும் அவர் பேசுகையில் அரசு கல்லூரி மாணவர்கள் தாமாக முன்வந்து ரத்ததானம் செய்ய முன் வந்துள்ளனர்.
குறிப்பாக முகாமில் 100 பேர் கொடுக்கக்கூடிய இடத்தில் 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள் வந்து இரத்ததானம் செய்துள்ளனர் மேலும் அரசு கலை கல்லூரி ஆசிரியர் பெருமக்களுக்கும் மற்றும் மாணவ மாணவிகளுக்கு தனது பாராட்டை தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் செல்வராஜ் ,கோமதி செல்வகுமார் பட்டனம் ஊராட்சி மன்ற தலைவர் இராமநாதன், சொர்னா கார்த்திக்,கனக துர்காதேவி,ஜெயன் வாசுதேவன், ஞானபிரகாசம்,பாண்டியராஜன், ரமேஜ் வழக்கறிஞர் ஆகியோர் இந்த முகாமினை துவக்கி வைத்தார்கள்.
மேலும் முகாமில் கல்லூரி பயிலும் ஏராளமான மாணவர்கள் இரத்தானம் செய்தனர் மேலும் மாணவர்களுக்கு முகாம் நடைபெறும் முன்னதாக இரத்த அழுத்தம்,சர்க்கரை அளவு சரிபார்க்கப்பட்டது.மேலும் இரத்த தான முகாமில் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் தமிழ் பவுண்டேசன் மற்றும் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்