• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் சங்கத்தினர் மூன்று நாள் அடையாள வேலை நிறுத்தம்

April 22, 2022 தண்டோரா குழு

டீசல், இன்சூரன்ஸ், சாலை வரி மற்றும் உதிரிபாகங்கள் விலை உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் சங்கத்தினர் மூன்று நாள் அடையாள வேலை நிறுத்ததில் பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, இன்சூரன்ஸ், சாலை வரி மற்றும் உதிரிபாகங்கள் விலை உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் சங்கத்தினர் மூன்று நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வேலைநிறுத்தத்தில் 1500 ஜேசிபிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பணிகள் நடைபெறாமல் முடங்கியுள்ளது. மேலும் அடையாள வேலை நிறுத்தத்தால் சுமார் 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து உயர்ந்து வரும் டீசல் விலையால் ஜேசிபி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரி கொண்டு வர வேண்டும்.

அதேபோல் இன்சூரன்ஸ்,சாலைவரி, உதிரிபாகங்கள் விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க