• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருநெல்வேலி – மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் இன்று முதல் இயக்கம்

April 21, 2022 தண்டோரா குழு

கோவை வழித்தடத்தில் இன்று (ஏப்ரல் 21) முதல் திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

கோடை விடுமுறையை முன்னிட்டு திருநெல்வேலியில் இருந்து கோவை, பொள்ளாச்சி வழித்தடத்தில் மேட்டுப்பாளையத்துக்கு இன்று முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி-மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து இன்று முதல் வியாழக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

இதேபோல், ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலியை சென்றைடையும்.

இந்த ரயிலானது,சேரன்மாதேவி,அம்பை, கடையம்,பாவூர் சத்திரம்,தென்காசி, ராஜபாளையம்,ஸ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி, விருதுநகர்,மதுரை,திண்டுக்கல்,ஒட்டன்சத்திரம், பழனி,உடுமலை,பொள்ளாச்சி,போத்தனூர், கோவை நிலையங்களில் நின்று செல்லும் என சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க