• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உண்டியலை வழங்கிய திருநங்கைகள்

April 18, 2022 தண்டோரா குழு

கோவையை சேர்ந்த ட்ரான்ஸ்மாம் என்ற திருநங்கைகள் நல அறக்கட்டளை அமைப்பு சார்பாக கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு சிறு சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்த உண்டியல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பெள்ராஜ் தலைமை வகித்தார். ட்ரான்ஸ்மாம் அறக்கட்டளையின் உறுப்பினர் திருநங்கை அனுசியா முன்னிலை வகித்தார். இந்த பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சிறு சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பண சேமிப்பு பெட்டகம் (உண்டியல்) வழங்கப்பட்டது.

அப்படி உண்டியலை தரும்போது, அதில் ஒரு ரூபாய் முதல் 5 ரூபாய் வரை காசுகள் போட்டு தரப்பட்டது. தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டுவைத்து தண்ணீர் ஊற்றினர். முன்னதாக ட்ரான்ஸ்மாம் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் பேசும்போது, சிறுவயதில் இருந்தே சிறுசேமிப்பு மிகவும் முக்கியம் என்பதால் உண்டியலை பள்ளி மாணவர்களுக்கு தந்துள்ளோம்.

இதுதவிர திருநங்கைகள் மீது சமூக ரீதியான தவறான கண்ணோட்டம் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து திருநங்கைகள் பள்ளி மாணவ, மாணவிகளுடன் செல்பி எடுத்துக்கொக்ண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் ட்ரான்ஸ்மாம் அறக்கட்டளையின் உறுப்பினர்களான திருநங்கைகள் மதுரா, ஸ்ரீமதி, கார்த்திகா, ஷாரிகா, ரக்ஷனா, மெல்லினா, பிரவினா, கார்த்திக், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் திரளாக கலந்துக்கொண்டனர்.

மேலும் படிக்க