• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சாதி சான்றிதழ்களை கிழித்தெரிந்து சாலை மறியல் போராட்டம்..!

April 18, 2022 தண்டோரா குழு

சாதி சான்றிதழ்களில் தங்கள் தொழிலை அடையாளப்படுத்தியுள்ளதாக தமிழக வண்ணார் பேரவையினர் சாதி சான்றிதழ்களை கிழித்தெரிந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு தமிழ்நாடு வண்ணார் பேரவையினர் மற்றும் தமிழக வாழ்வுரிமை பாதுகாப்பு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதில் வண்ணார் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழக அரசு கொடுக்கப்படும் சாதி சான்றிதழில் வண்ணார் சலவை தொழிலாளர்கள் என்று குறிப்பிட்டுள்ளதாகவும், தாங்கள் செய்யும் தொழிலை அடையாளபடுத்தும் விதமாக இந்த சாதி சான்றிதழில் பெயர் அமைந்துள்ளதாகவும்,இதனை உடனடியாக நீக்கி இந்து வண்ணார் என்று குறிப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தி சாதி சான்றிதழ்களை கிழித்தெரிந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

மேலும் படிக்க