• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொள்ளாச்சியில் வரும் 18ம் தேதி தேசிய அளவிலான, 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான சதுரங்க போட்டிகள்

April 17, 2022 தண்டோரா குழு

தேசிய அளவிலான,18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான எம்பிஎல் 31 வது, சதுரங்க போட்டிகள், பொள்ளாச்சியில் வரும் 18 ம்தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது.

கோவை பந்தயசாலை பகுதியில், உள்ள சக்திசுகர்ஸ் அலுவலகத்தில் இன்று, செய்தியாளர்களை சந்தித்து பேசிய, தமிழ்நாடு சதுரங்க விளையாட்டு அமைப்பின் தலைவர் மாணிக்கம்,மற்றும்,போட்டி ஒருங்கிணைப்பாளர் அனந்தராமன் செய்தியாளிடம் கூறும்போது

சக்தி குழும நிறுவனங்களில் நிறுவனத் தலைவர் அருட்செல்வர் நா மகாலிங்கம் அவர்களின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரியும், கோவை மாவட்ட சதுரங்க சங்கமும்,இணைந்து தேசிய அளவிலான 18 வயதுக்குட்பட்டோருக்கான எம்பிஎல், சதுரங்க சாம்பியன் போட்டிகள் வரும் 18-ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இதில் இதுவரை, ஆண்கள் பெண்கள் என பொதுவாக 235 போட்டியாளர்கள் விண்ணப்பித்து உள்ளனர், என்றும், இதில் முதல் பரிசாக 90 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 70 ஆயிரம் ரூபாயும், வழங்கபட உள்ளது, மொத்தமாக ஒன்பது லட்சரூபாய் மதிப்பிலான பரிசுகள் வழங்கபட உள்ளது எனவும், மேலும் சிறப்பாக விளையாடும்,3 வீரர் வீராங்கனைகளுக்கு கோப்பைகள், வழங்கப்பட உள்ளது எனவும், இதில் வெற்றி பெறும் போட்டியாளர்கள் உலக 18 வயதிற்கு உட்பட்டோருக்கான சதுரங்கப் போட்டிகளில் விளையாட தகுதி பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.

இந்த போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி வீரர்களான 17 வயது மிக்க சர்வதேச மாஸ்டர் ஸ்ரீஹரி,17 வயது அவினாஷ் ரமேஷ்,17 வயதான மனிஷ் அன்டோ கிறிஸ்டினோ, மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆயுஷ் ஷர்மா, கோவையைச் சேர்ந்த ஹர்ஷத், போன்ற பலரும் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க