• Download mobile app
13 Feb 2026, FridayEdition - 3656
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 21ம் தேதி தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

April 14, 2022 தண்டோரா குழு

கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 21 ஆம் தேதி தொழிற்பழகுனர்களுக்கான அப்ரண்டீஸ் சேர்க்கை முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ், தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பாக, கோவை மாவட்ட அளவில் தொழிற்பழகுனர்களுக்கான அப்ரண்டீஸ் சேர்க்கை முகாம்,கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 21 ஆம் தேதி( வியாழக்கிழமை) காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த முகாமில், மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் பங்கேற்று 500 க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளனர். இதில், பங்கேற்று தேர்வு பெற்றால் தொழிற் பழகுநர் பயிற்சி அளிக்கப்பட்டு, மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும். தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் உள்ளது.

மேலும்,வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கிடைக்கிறது.தொழிற்பழகுநர் பயிற்சியின் போது,தொழிற்பிரிவுகளுக்கு ஏற்ப தொழில் நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் என்.சி.வி.டி, எஸ்.சி.வி.டி யின் கீழ் தொழிற்பயிற்சி பெற்றவர்கள் 10,பிளஸ் 1மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் முடித்த தகுதி வாய்ந்தவர்கள் உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.

மேலும் விவரங்களுக்கு இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்,அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம், கோவை என்ற முகவரியில் 9486447178,9442651468, 9840343091 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க