கோவை விழாவின் 14வது பதிப்பை, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
கோவை விழா என்பது கோவை நகரத்தின் உணர்வை கொண்டாட கடந்த 13 ஆண்டுகளாக பல அமைப்புகள் மற்றும் கோவை மக்களால் நடத்தப்படும் ஒரு முயற்சியாகும். கோவை மக்களின் கலாச்சாரம், பாரம்பரியங்கள் மற்றும் சமூக உணர்வின் வண்ணமயமான கொண்டாட்டத்தை கோவை விழா குறிக்கிறது.
கோவை விழாவின் முதல் நாள் நிகழ்வாக ‘ஆர்ட் ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி கோவை ரேஸ்கோர்ஸ் வாக்கர்ஸ் பாதையில் துவங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் துவக்கி வைத்தனர்.ஆர்ட் ஸ்ட்ரீட் என்பது கோவை விழாவின் முக்கிய நிகழ்வாகும். இதில் கலைஞர்கள் தங்கள் கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தினார்கள். 75 கலைஞர்கள் மற்றும் 14 பட்டறைகளுடன், ரேஸ் கோர்ஸ் வாக்கர்ஸ் பாதை மிகவும் கலைநயமிக்கதாக இருந்தது.
மேலும் கோவை விழா லோகோவை 14,000 கைரேகைகள் மூலம் வரைந்து உலக சாதனை முயற்சிக்கும் தன்னார்வலர் முயற்சித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கோவை விழா ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீ குமரவேலு, அஷ்வின் மனோகர், நிஷித் ஷா, அபிஷேக் கல்ரோ, அவந்திகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்