• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் அக்ரி பிசினஸ் சென்டர் பயிற்சி துவக்க விழா

April 7, 2022 தண்டோரா குழு

கோவை பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் அக்ரி கிளினிக் மற்றும் அக்ரி பிசினஸ் சென்டர் பயிற்சி துவக்க விழா நடந்தது.

இத்திட்டம்,நபார்டுடன் இணைந்து இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் நடத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் ஹைதராபாத்தில் உள்ள தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனத்தின் வழியாக செயல்படுத்தப்பட்டு,அதற்குரிய 45 நாட்கள் பயிற்சி நேற்று (ஏப்.6) கல்லூரி வளாகத்தில் துவங்கியது. இதில் தேர்வு செய்யப்பட்ட 30 பேர் பங்கேற்றனர்.

துவக்க விழாவில், கல்லூரி செயலர் முனைவர் என்.யசோதா தேவி வரவேற்றார்.

கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.நிர்மலா பேசும்போது, இத்திட்டத்தின் வழியாக விவசாயிகள் சமூக பொருளாதாரத்தில் வளர்ச்சியும், வணிக வேளாண்மையில் மேம்பாடும் அடைவது உறுதி என்று கூறினார்.

இத்திட்டத்தை துவக்கி வைத்து வேளாண் இணை இயக்குநர் ஆர்.சித்ராதேவி பேசும்போது,

வேலைவாய்ப்பை தேடும் இள வயதினர் இத்திட்டத்தின் வழியாக பயனடைவர். இப்பயிற்சியின் வழியாக விவசாயிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அறிந்து செயல்பட வழிவகை செய்வதோடு அவர்கள் வியாபார வணிக நோக்கில் செயல்படுவதற்குரிய பயிற்சியும் அளிக்கப்படும். வருங்காலத்தில் சொட்டு நீர் பாசன பயன்பாடு மேலோங்கும், பயனாளிகளுக்கு அரசு ரூ.ஓரு லட்சம் மானியத் தொகை அளித்து ஊக்குவிக்கும் திட்டம் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

இணைய தளம் வழியாக ஹைதராபாத்தைச் சார்ந்த மாநில ஆலோசகர் ரூபேஷ் பேசுகையில்,

இத்திட்டம் (ஏசிஏபிசி) 2002-ல் நடைமுறைப்பட்டது. இப்பயிற்சியால் 79 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். இப்பயிற்சியை 45 நாட்கள் முடித்த பின்பும் கூட ஒரு வருடம் வரை நிறுவன வழிகாட்டுதல் மூலம் பயன்பெறுவார்கள் என்றார்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த ஓய்வு பெற்ற பதிவாளர் முனைவர் பி.சந்தானகிருஷ்ணன், கனரா வங்கி லிட்., வங்கி மேலாளர் பி.கெளசல்யாதேவி, நபார்டு மாவட்ட வளர்ச்சி மேலாளர் திருமலைராவ், வேளாண்மை மற்றும் கிராமப்புற மேலாண்மையியல் துறைத் தலைவர் முனைவர் என். வெங்கடேச பழனிச்சாமி ஆகியோர் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
பூசாகோஅர கிருஷ்ணம்மாள் கல்லூரி உதவி பேராசிரியரும் நோடல் அதிகாரியுமான முனைவர் ஆர். திவ்யா நன்றி கூறினார்.

மேலும் படிக்க