• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஓரினச்சேர்க்கைக்கு வரவழைத்து பணம் பறித்த கல்லூரி மாணவர்கள்

April 5, 2022 தண்டோரா குழு

கோவையில் சமூக வலைதள செயலி மூலம் தொடர்பை உண்டாக்கி ஓரினச்சேர்க்கைக்கு வரவழைத்து பணம் பறித்த வழக்கில் கைதான மாணவர்கள் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

சமூக வலைதளத்தில் ஒரு குறிப்பிட்ட பெயரில் ஆபாச செயலி உள்ளது.இந்த செயலியில் ஓரினச்சேர்க்கையாளர்கள் பலர் உறுப்பினர்களாக உள்ளதாக தெரிகிறது.இந்நிலையில், கோவையை சேர்ந்த வெவ்வேறு கல்லூரியின் 3 மாணவர்கள் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். அவர்கள் இந்த செயலி குறித்து அறிந்து கொண்டு அதில் தங்களை உறுப்பினர்களாக இணைத்து கொண்டனர்.அதில் உறுப்பினர்களாக இருப்பவர்களின் செல்போன் எண்கள் பதிவிடப்பட்டிருக்கும்.

அந்த செல்போன் எண்ணை எடுத்து பேசும் கல்லூரி மாணவர்கள் தங்கள் சொல்லும் இடத்துக்கு வந்தால் ஜாலியாக இருக்கலாம் என பேசியுள்ளனர்.பின்னர் மறைவான இடத்துக்கு வரவழைத்து 3 பேரும் சேர்ந்து அவர்களை நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டியுள்ளனர். நாங்கள் கேட்கும் பணத்தை கொடுக்கவேண்டும், இல்லையென்றால் சமூக வலை தளத்தில் வெளியிட்டு விடுவோம்,உங்களது எதிர்காலம் வீணாகி விடும் என மிரட்டி பணம். செல்போன் பிடுங்கி வந்துள்ளனர்.

இந்நிலையில் தான், கோவை கணபதி பகுதியை சேர்ந்த 34 வயதான வாலிபர் சாயிபாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் அவர், காந்திபுரம் டாஸ்மாக் பாரில் சமையல்காரராக வேலை பார்ப்பதாகவும், எனது செல்போனில் பேசிய வாலிபர் ஓரினச்சேர்க்கை ஆசை காட்டி சாயிபாபா காலனி பகுதிக்கு வரவழைத்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டுவதாக புகார் அளித்தார்.

விசாரணையில், சமூக வலை தள செயலி மூலம் ஓரினச்சேர்க்கை விருப்பவமுள்ளவர்களை கண்டறிந்து அவர்களிடம் சபலத்தை உண்டாக்கி பணம் பறித்தது கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நேற்று முன்தினம் சிவானந்தா காலனி அருகே உள்ள காந்தி நகரை சேர்ந்த கோவை பீளமேட்டில் உள்ள கல்லூரியில் பிகாம் 3ம் ஆண்டு படிக்கும் பிரசாந்த் (19),வேறொரு கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் 3ம் ஆண்டு படிக்கும் நிஷாந்த் (21), மாணிக்கம் (20) என தெரியவந்தது.

நேற்று முன்தினம் போலீசார் கல்லூரி மாணவர்கள் பிரசாந்த், நிசாந்தை கைது செய்தனர். மாணிக்கத்தை தேடி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.மேலும் யாரிடமாவது அவர்கள் இது போன்று பணம் செல்போன் பறித்துள்ளனரா என விசாரித்தனர்.அதில், கடந்த மார்ச் 9ம் தேதி காந்திபுரம் அலமு நகரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் 31 வயதான வாலிபரிடம் விலை உயர்ந்த செல்போன் மற்றும் ரூ.5 ஆயிரம் பறித்ததும் தெரியவந்தது.

ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் கொண்ட அந்த வாலிபரை சாயிபாபாக காலனி தனியார் மருத்துவமனை பின்புறம் வரவழைத்து அவரை 3 கல்லூரி மாணவர்களும், உருட்டுக்கட்டை மற்றும் இரும்பு கம்பியால் தாக்கி செல்போன், பணம் பறித்ததும் விசாரணையில் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட வாலிபர் புகார் தெரிவிக்காத நிலையில், கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. அவர்கள் பல பேரை ஏமாற்றியிருக்கலாம், பலர் தங்களது நலன் கருதி காவல் நிலையத்தில் புகார் அளிக்காமல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஓரினச்சேர்க்கை ஆசை காட்டி கல்லூரி மாணவர்கள் பணம் பறித்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க