• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மன அமைதியால் மட்டுமே உலக அமைதி கிடைக்கும் என்பதை வலியுறுத்தும் விதமாக பேரணி

April 4, 2022 தண்டோரா குழு

தியானம் மூலம் கிடைக்கும் மன அமைதியால் மட்டுமே உலக அமைதி கிடைக்கும் என்பதை வலியுறுத்தும் விதமாக கோவை விவாங்கம் யோகா சார்பாக பேரணி நடைபெற்றது.

இந்தியா உட்பட உலகம் முழுவதும் யோகா மற்றும் தியானம் குறித்த விழிப்புணர்வை விவாங்கம் யோகா மையம் ஏற்படுத்தி வருகிறது.இதன் நிறுவனர் சத்குரு சதாபல் தேவ்ஜி மகாராஜ் யோகா மற்றும் தியானம் குறித்த தனது 17 வருட அனுபவங்களை தொகுத்து சுர்வேதா எனும் புத்தகத்தை எழுதியுள்ளார்.

இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழகத்தில் முதன் முறையாக கோவை விவாங்கம் யோகா சார்பாக யோகா மற்றும் தியானம் குறித்த விழிப்புணர்வு பேரணி ராம் நகர் பகுதியில் நடைபெற்றது. சுர்வேத யாத்ரா என அழைக்கப்படும் இதில் ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டு குருஜியின் சுர்வேதா புத்தகத்தை கைகளில் ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

இது குறித்து விஜய் விமலா கூறுகையில், தியானம் செய்வதால் கிடைக்கும் மன அமைதியால் மட்டுமே உலகில் அமைதி நிலவும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க