• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மக்காச்சோளம் விலை மே வரை குவிண்டாலுக்கு ரூ.2,400 வரை இருக்கும் – வேளாண் பல்கலை கணிப்பு

April 4, 2022 தண்டோரா குழு

மக்காச்சோளத்தின் விலை வரும் மே மாதம் வரை குவிண்டாலுக்கு ரூ.2,400-ஆக இருக்கும். இது தொடர்பாக பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் விலை முன்னறிவிப்பு திட்டமானது, மக்காச்சோளத்திற்கான முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது. வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீட்டின் படி, 2021-22 ஆண்டில் மக்காச்சோளமானது இந்தியாவில் கிட்டத்தட்ட 9.5 மில்லியன் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 32.4 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2019-20ம் ஆண்டில் 0.34 மில்லியன் எக்டர் பரப்பளவில் 2.47 மில்லியன் டன்கள் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்பட்டது. தமிழகத்தில் பெரம்பலூர், அரியலூர், சேலம், திண்டுக்கல்,நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. வர்த்தக மூலங்களின் படி, தமிழகத்தில் மக்காச்சோள வரத்தானது மக்காச்சோளம் உற்பத்தி செய்யும் பகுதிகளில் இருந்து வருகிறது.

கர்நாடகாவில் வடக்கிழக்கு பருமழை தாதமதம் ஆனது. இதனால், விளைச்சல் கணிசமாக பாதிக்கப்பட்டு சந்தை வரத்து குறைந்துள்ளது. இதுவே நடப்பு பருவத்தில் மக்காச்சோளத்தின் விலை அதிகரிக்க காரணமாக உள்ளது.விலை முன்னறிவிப்பு திட்டமானது, கடந்த 27 ஆண்டுகளாக உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலவிய மக்காச்சோளம் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

ஆய்வுகளின் அடிப்படையில், தரமான மக்காச்சோளத்தின் பண்ணை விலையானது மார்ச் முதல் மே 2022-ல் குவிண்டாலுக்கு ரூ.2,300 முதல் ரூ.2,400-ஆக இருக்கும். எனவே, விவசாயிகள் மேற்கூறிய ஆலோசனையின் அடிப்படையில் சந்தை முடிவுகளை எடுக்க வேண்டும் என பரிந்துரைக்கப்படுகின்றனர்.

மேலும் படிக்க