கோவை துடியலூர் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தனது பூர்வீக சொத்தான 72 வீட்டு மனையை மீட்டுத் தருமாறு நெசவாளர் ஜீவானந்தம் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
கோவை துடியலூர் பகுதியில் 1963 ஆம் ஆண்டு தனது பாட்டிக்கு கொடுத்த 72 வீட்டு மனை தற்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜீவானந்தம் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜீவானந்தம் நெசவாளர் குடும்பத்தை சேர்ந்த தங்களுக்கு வழங்கப்பட்ட 72 வீட்டு மனையை தற்போது புறம்போக்கு நிலம் என அறிவித்து அரசியல் குறுக்கீடு காரணமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனை மீட்க தொடர்ந்து முயற்சி மேற்கொண்டும் பலனளிக்காத நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியரிடம் இடத்தை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும் தங்களது வாழ்வாதாரம் காக்க இந்த இடத்தை மீட்டுத் தருவது மிகவும் அவசியமானது என்றும் ஜீவானந்தம் குறிப்பிட்டார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு