இன்றைய தினம் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தை பத்து ரூபாய்க்கு கீழ் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதால் தங்களுக்கு முதலீடு செய்த தொகை கூட கிடைப்பதில்லை எனக் கூறியும் சின்ன வெங்காய விவசாயத்தை உரிய விலைக்கு விற்பனை செய்ய வழிவகை செய்து தருமாறும் கோரி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர் சு. பழனிச்சாமி தலைமையில் மனு அளிக்க வந்த அவர்கள் சின்ன வெங்காயத்தை மாலையாக கோர்த்து கழுத்தில் அணிவித்து கொண்டனர். மேலும் சின்ன வெங்காயத்தை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்தனர்.எனவே மனு அளிக்க வந்த பொதுமக்கள் பலரும் சின்ன வெங்காயத்தை வாங்கி சென்றனர்.
இது குறித்து அவர்கள் அளித்த மனுவில்,
சின்ன வெங்காயம் ஒரு ஏக்கர் விவசாயம் செய்வதற்கு 70 ஆயிரத்தில் இருந்து 75 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் எனவும் ஆனால் கொள்முதல் விலை மிகவும் குறைவாக இருப்பதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர். எனவே தமிழக அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோவை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சின்ன வெங்காயத்தை உரிய விலைக்கு விற்பனை செய்ய வழிவகை செய்து தரவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு