கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனியார் அறக்கட்டளைகளுடன் மாவட்ட நிர்வாகம் இணைந்து ஆட்சியர் சமீரன் தலைமையில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு சத்துணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தனியார் அறக்கட்டளைகளுடன் மாவட்ட நிர்வாகம் இணைந்து ‘உடல்நல மற்றும் மனநல பாதுகாப்பு’ திட்டத்தின் கீழ் சத்துணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு 2500 மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதன் முதல் கட்டமாக மாநகராட்சி பகுதிகளில் உள்ள 3 பள்ளிகள் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள 7 பள்ளிகள் என மொத்தம் 10 பள்ளிகளிலிருந்து தலா 15 மாணவ-மாணவிகள் வீதம் 150 மாணவ- மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களுக்கு சத்துணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை ஆட்சியர் சமீரன் துவங்கி வைத்தார்.இச்சத்துணவு தொகுப்பில் பச்சை பயிறு, சிவப்பு அரிசி, கொள்ளு, வெள்ளை சுண்டல், தட்டை பயிறு, பாதாம், சோயா, அவல், கருப்பு சுண்டல், பேரிச்சம்பழம், பச்சை பட்டாணி, முந்திரி, ராகி, கம்பு, சாமை, வரகு மற்றும் அத்தி போன்றவைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு