கோவை உக்கடம், சுங்கம் வாலாங்குளம் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், என்சிசி மாணவர்கள்,அந்தபகுதியில் உள்ள குப்பைகளை அகற்றும் பணிகளில் இன்று ஈடுபட்டனர்.
கோவை உக்கடம்,சுங்கம் வாலாங்குளம் பகுதியில் சாலையோரங்களில் போடப்பட்டுள்ள குப்பைகளை அகற்றவும்,பொது இடங்களை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, என்சிசி மாணவர்களுடன், இராணுவ வீரர்களும் இணைந்து சுத்தம் செய்தனர்.
நடைபெற்ற இந்த பணிகளை, 4 தமிழ்நாடு பெட்டாலியன் என்சிசி கர்னல் J P S சவான் மற்றும்,மேஜர் ஆபிசர், M D கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினார்.சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள், உக்கடம் வாலாங்குளம், சுங்கம் பகுதியில் குப்பைகளை அகற்றுதல், பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி மூன்று குழுக்களாகப் பிரிந்து,பொதுமக்களிடையே இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு