• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உலகத்தர வசதிகளுடன் புதிய குடியிருப்பு மனைகளுக்கான செயல்திட்டம் கோவையில் துவக்கம் !

March 30, 2022 தண்டோரா குழு

இந்தியாவில் முதன்முறையாக 127 ஏக்கர் நிலப்பரப்பில் ஹெலிபேட் வசதியுடன் உலகத்தர வசதிகளுடன் புதிய குடியிருப்பு மனைகளுக்கான செயல்திட்டம் கோவையில் துவங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் கோவை முக்கிய நகரமாக பார்க்கப்படுகிறது.அதே நேரத்தில் உலக அளவில் தொழில் நிறுவனங்கள் கோவையில் அதிக முதலீடுகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தின் ரியல் எஸ்டேட் துறையில் முதன்மை நிறுவனமான ஜி ஸ்கொயர் தனது ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டமாக 121 ஏக்கர் நிலப்பரப்பில் ஜி ஸ்கொயர் சிட்டி எனும் குடியிருப்பு மனைகளுக்கான செயல் திட்டத்தை எல்.அண்ட் பைபாஸ் சாலையில் துவக்கியுள்ளனர்.

இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.இதில் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஈஸ்வர் மற்றும் தலைமை விற்பனை மேலாளர் தியாகராஜன் மணி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது இந்தியாவிலேயே முதன் முறையாக 121 ஏக்கர் நிலப்பரப்பில், ஹெலிபேட், கல்விக்கூடம் மருத்துவமனை, வங்கி, மால், அத்தியாவசியமான ஸ்டோர் உள்ளிட்ட 150 விதமான வசதிகளை கொண்ட குடியிருப்பு வளாகமாக இத்திட்டத்தக உருவாக்க உள்ளதாகவும்,குறிப்பாக நவீன வகையிலான பாதுகாப்பு அம்சங்கள் வசதிகளுடன்,1663 வில்லா மனைகளுடன்,26 வர்த்தக பயன்பாட்டு மனைகளும் இங்கு உருவாக்கி உள்ளதாக தெரிவித்தனர்.

குறிப்பாக அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய தமிழகத்தின் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்மார்ட்சிட்டியாக கோவையில் உருவாக உள்ள ஜி ஸகொயர் சிட்டி திகழும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும் படிக்க