• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக காவல்துறையால் மாவோ தீவிரவாதம் தடுப்பு – விஜயகுமார்

December 26, 2016 தண்டோரா குழு

தமிழகத்தில் காவல்துறை மேற்கொண்ட துரிதமான நடவடிக்கையாலும் தொடர் கண்காணிப்பாலும் தடுக்கப்பட்டது என்று மத்திய அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகர் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் தெரிவித்தார்.

மாவோயிஸ்ட்களின் தாக்குதல் 2008 ஆம் ஆண்டிலிருந்து 45 சதவீதம் குறைந்துவிட்டது என்றும் அவர் கூறினார்.

கோவையில் செய்தியாளர்களைத் திங்கள் கிழமை சந்தித்த அவ ர் மேலும் கூறியதாவது:

தென்னிந்தியாவில் 2011-12 ஆம் ஆண்டுகளில் மாவோயிஸ்டுகள் தங்களை வலுப்படுத்த முயன்றனர். அந்த சமயத்தில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட காவல் துறையினரின் துரிதமான நடவடிக்கையாலும் தொடர் கண்காணிப்பாலும் அது தடுக்கப்பட்டது.

தமிழகம், கேரள, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களை ஒட்டிய வனப்பகுதி மரங்கள் அடர்த்தி என்பதால் மாவோயிஸ்டுகள் தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், காவல் துறையினர் மேற்கொண்ட துரித நடவடிக்கையினால், அவை கட்டுப்படுத்தப்பட்டன.

கடந்த சில ஆண்டுகளில் மாவோ அமைப்பினரின் வெடித் தாக்குதலில் 147 சி ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்தனர். 304 வீரர்கள் தங்கள் உடல் உறுப்புகளை இழந்தனர்.

மாவோயிஸ்டுகள் ஒடுக்கப்படுவதில் மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்பு அவசியம். வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு என்ற அடிப்படையில் கைகோத்துச் சென்றால் மட்டுமே அதை ஒழிக்க முடியும்.
ஜனநாயகத்தில் பல பிரச்சினைகள் இருந்தாலும், ஆயுதம் ஏந்தி போராடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை இத்தகைய விளைவுகளை ஒழிக்க முடியாது.

கேரளத்தில் மாவோயிஸ்டுகள மீது நடத்தப்பட்ட என்கவுண்டர் போலியானது என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது. எந்த ஒரு என்கவுன்டரும் சரியானதுதான் என்று யாரும் கருத்து கூறியதில்லை.

இவ்வாறு விஜயகுமார் கூறினார்.

மேலும் படிக்க