கோவையில் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து காகிதங்கள் விலையேற்றம் செய்யப்பட உள்ளதாக கோவை அச்சகத்தார் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கோவையில் நிருபர்களிடம் கோவை அச்சகத்தார் சங்கத் தலைவலர் நாசர், துணைத் தலைவர் கனகராஜ், செயலாளர் ஜமாலுதீன், துணை செயலாளர், கணேஷ் ஆகியோர் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட அச்சகங்கள் (பிரிண்டிங் பிரஸ்) செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சிவகாசிக்கு அடுத்து கோவையில்தான் அதிகளவில் அச்சகங்கள் செயல்படுகின்றன. இத்தொழிலில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.கொரோனாவால் தொழில் பாதிக்கப்பட்டு இருந்தது. தற்போது அதில் இருந்து மீண்டு வந்து கொண்டு இருக்கிறோம்.
இந்நிலையில், ஆண்டின் தொடக்கத்தில் ரூ.2,500 என இருந்த ஒரு ரீம் காகிதத்தின் விலை ரூ.5 ஆயிரமாக விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 1ம் தேதி மீண்டும் காகிதத்தின் விலை ரூ.5 ஆயிரம் வரை உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அச்சகங்களிலும் ஆர்ட் காகிதம் உள்பட அனைத்து விதமான காகிதங்களின் விலையும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து உயர்த்தப்படுகிறது.
காகிதங்களின் விலை உயர்வை பொருத்து அச்சகங்களில் விலை உயர்த்தப்படும். எனவே, இந்த விலையேற்றத்தை ஏற்றுக்கொண்டு பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் பெரு நிறுவனங்கள் எப்போதும்போல் ஆதரவளிக்க வேண்டும். காகிதங்களின் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த தமிழகத்தில் அரசு சார்பில் காகித உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். அரசு அச்சகங்களில் உபரியாக உள்ள வேலைகளை எங்களுக்கு வழங்க வேண்டும்.
அச்சகங்களுக்கான ஜிஎஸ்டியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும். மூலப்பொருள்கள் விலையேற்றதால் அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அச்சகத் தொழிலை தமிழக அரசு மீட்டு எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது