• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ரூ.300 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு

March 29, 2022

கோவை மாவட்டம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுட்டனர். பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கங்கள், வங்கி ஊழியர்கள் சம்மேளனம் உள்ளிட்ட சங்கத்தினர் 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தால் கோவை மாவட்டத்தில் உள்ள 1400 வங்கிகளில் முழுமையாக சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால்,சுமார் ரூ.300 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. ஏ.டி.எம்.களில் பணம் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனால், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

மேலும் படிக்க