March 29, 2022
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் டாக்டர் நஞ்சப்பா சாலையிலுள்ள நகர்நல மையம் மற்றும் கணபதியிலுள்ள நகர்நல மையம் ஆகியவற்றிற்கு மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா நேரில் சென்று கர்ப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், சிகிச்சை முறைகள் மற்றும் சிகிச்சைக்கான வருகை பதிவேடு உள்ளிட்டவை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத்தொடர்ந்து வார்டு எண் 26க்குட்பட்ட பீளமேடு பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் நல்வாழ்வு மையம் கட்டடப்பணிகளை ஆய்வு மேற்கொண்ட கமிஷனர் பணிகளை தரமானதாகவும், விரைவில் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென சம்மந்தப்பட்ட பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்குமார், 26வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி, வடக்கு மண்டல உதவி கமிஷனர் மோகனசுந்தரி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.